லிப்ட்
இரவு நேரம். சிக்னல்ல டூவீலர நிறுத்தியிருந்தேன். அந்த கேப்புல ஒரு அன்பர் வந்து, “சார் காளியப்பா ஆஸ்பத்திரி வரைக்கும் லிப்ட் கொடுங்க”னு கேட்டு வண்டியில ஏறிகிட்டார்.
க்ரீன் சிக்னல் விழுந்ததும் கிளம்பிட்டோம். அப்புறம்…
வண்டியில ஹெட்லைட் போடாம இருக்கீங்க…”
அது உடைஞ்சி பத்து நாளாச்சு…”
சார்.. சார்.. இப்படி திரும்பும்போது இன்டிகேட்டர போடுங்க..”
அது நாலு நாளா எரிய மாட்டேங்குது சார்…”
அய்யோ… எதிர்ல போற வண்டிமேல இடிச்சிட பாத்தீங்களே. தள்ளி வரும்போதே பிரேக்க பிடிக்க கூடாதா?”
நான் பிடிக்க மாட்டேன்னா சொன்னேன். அது சரியா பிடிக்கல…”
இப்படியா சார் ஓவர்டேக் பண்றது.. ஹாரன் அடிங்க...”
வச்சிக்கிட்டா வஞ்சன பண்றேன்.. அடிக்க மாட்டேங்குது...”
அப்பாடி… இப்படி ஸ்பீட் பிரேக் மேல வேகமா ஏறாதீங்க சார். தூக்கிப் போட்ரும்…”
கண்ணு சரியா தெரியல. கண்ணாடி ஆர்டர் பண்ணியிருக்கேன்..”
நிறுத்துப்பா வண்டிய… நான் இறங்கிக்கறேன்..”
ஆஸ்பத்திரிக்கு போகணும்னு சொன்னீங்க?....."
அட்மிட் ஆகுறதுக்கு இல்லப்பா… ஆளவிடு..”
சே… இதுக்கெல்லாமா பயப்படுவாங்க?..