காதல்

நாளை காதலர் தினம். மக்கள் பலர் தாங்கள் விரும்பியோருக்கு மரியாதை செலுத்தும் நாள். பலர் காதலை பற்றி பலவன கூறி, பல நம்பிக்கைகளை வளர்க்கும் நாள். ஏன் இவ்வாறு நடக்கிறது? காதல் என்பது உண்மையில் தெய்வீகச் செயலா? ஏன் அதை மக்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர்?

காதலப்பற்றி விஞ்ஞானம் அளிக்கும் தகவல் இதோ. காதல் என்பது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நம் உடலில் நடைப்பெறும் ரசாயன மாற்றமே. அவ்மாற்றமானது நம் மூளைக்கு புத்துனர்ச்சியும், ஊக்கமும் தருகின்றது. அவ்வளவு தான்.

உயிர் என்பது ரசாயனங்களின் நடனமே. சிறு வைரஸ் முதல், மரங்கள், மிருகங்கள், மனிதர்கள் ஆகிய அனைத்தும் ரசாயன இயந்திரங்கள் தான். கோடி கோடி ஆன்டுகளாக நடந்த பரினாம வளர்ச்சி மனிதன் போன்ற சிக்கலான இரசாயன இயந்த்ரங்களை, காலம் மற்றும் தற்செயல் உருவாக்கிவிட்டது.

தெய்வம் அல்லாமல் எவ்வாறு இவ்வாறு உருவாகினோம்? காதல் தெய்வீகம் இல்லையா? என பக்தி சிந்தனை உள்ளவவர்கள் வினா எழுப்பலாம். பலக் கோடி கணக்கான நட்சத்திரங்கள் இப் பிரபசத்தில் உள்லன, அதைச்சுற்றி பலக்கோடிக்கணக்கான கிரகங்களும் உள்ளன ஆனால் அங்கு உயிரினம் மனிதனைப்போல் இல்லை. அப்படியானால் அங்கு தெய்வம் இல்லையையா? தெய்வங்கள் ஏன் உலகத்தை மற்றும் உயிருக்கு தெர்தெடுத்தனர்? மற்ற கிரகத்தில் உயிரை உண்டாக்க தெய்வத்திற்கு சக்தி இல்லையா?

பக்தர்களால் விடையளிக்க முடியாத கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் எளிதில் விடையளிக்கின்றனர். உயிர் பல சரியான, சிக்கலான வேதியல் மாற்றங்கலால் உருவாகிறது. இவ்வாறு உருவாவதற்க்கு நேரம், சரியான ராசாயன பொருட்கள், போதுமான வாய்ப்புகள் தேவை. இது எல்லாம் சரிவர உலகில் இருந்ததால்தான் நான் இன்று காதலை பற்றி எழுதுகிறேன், நீங்கள் படிக்கிறீர்கள்.

வேதியல் இயந்திரமான உயிர், இயந்திரங்களைப்போல் பழுதடைந்துவிடும். எப்பொழுதும் சரிவர வேலை செய்யாது. பழுதால் இவ்வியந்திரத்தின் இயக்கம் நின்று போகலாம், அதைதான் நாம் மரணம் என்கிரோம். பலதடவை உயிரினம் வையகத்தில் உருவாகி தோற்றுள்ளது, ஆனால் ஒருமுரை மட்டும் உயிர் மரணத்தை ஜெய்த்தது. ஜெயித்ததன் காரணம் உயிர் தற்செயலாக இணப்பெருக்கம் செய்யக் கற்றுக் கொண்டது.

அன்று முதல் இன்று வரை எவ்வுயிரினம் திறமையாக இணப்பெருக்கம் செய்யமுடியுமோ, மாற்றங்களை சமளிக்க முடியுமோ, அவையே ஜெயித்தன, உலகை ஆண்டன. ஆகையால் இணப்பெருக்கம் செய்ய மகிழும் இனங்களே மிஞ்சின இவ்வையகத்தில். இனப்பெருகம் என்பது ஒரு மகிழ் நிகவாக மாறிவிட்டது. இவ்வினப்பெருகத்திற்று தயராகும் நிகழ்ச்சியே காதல். வேரு புன்னாக்கும் எதுவும் கிடையாது.

தூண்டுதல் அதிகம் இருந்தால் தான் நாம் இனப்பெருக்கம் செய்வோம், ஆகையால் தான் நம்மை எப்படியாவது நம் இனம் அழியாமல் காக்க நம்முள் உள்ள இரசாயன இயந்திரங்கள் நம்மை அளவிற்கு மிஞ்சி தூண்டுகின்றன, நாம் அவற்றிக்கு அடிமையாகி விடுகிறோம். அவ்வாறு அடிமையாகி விடுதல் தவறென கூறவில்லை, ஆனால் தோல்வி கண்டால், மெய்யை கண்டு சிரித்து விட்டு செல்வது மேல், பொய் மூடங்கள்ளுக்கு அடிமையாகல் இருத்தல் நன்று.