அனுட்டா மற்றும் ஈஸ்டர் தீவுகள்
அன்றொருநாள் அனிமல் பிலானெட் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஓர் நிகழ்ச்சியில் அனுட்டா மற்றுமும் ஈஸ்டர் தீவுகளைப்பற்றியது. இவ்விரண்டு தீவுகளும் பிசபிக் சமுதிரத்தில் உள்ளன. இத்திவுகள் மிகவும் சிறியவை, அதைச்சுற்றி நூற்றுக்கணக்கான மைல்கள் தண்ணீர்தான்.
ஆராய்ச்சியாளர்கள் ஈஸ்டர் தீவுகளுக்கு சென்ற போது அவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது. அத்தீவில் ஒரு மனிதன், மரம் கூட இல்லை, பறவைகளும் இல்லை, புல் மட்டுமே காணப்பட்டது. ஆனால் இத்தீவில் பிரம்மாண்டமான மனித சிலைகள் இருந்தன. ஒவ்வொரு சிலையும் கல்லால் ஆனவை, நூற்றுக் கணக்கான டன்கள் எடையுடையது.
உலகத்தில் நடுக்கடலில் எட்டாத இடத்தில், ஆள், மரம், இல்லாத தீவில் எப்படி இவ்வளவு பிரம்மாடமாண சிலைகள்? என பல ஆரய்ச்சியாளர்கள் மூளையை கசக்கினர். சிலர் இச்சிலைகள் தொழில் நுட்பத்தில் உயந்த வேற்று கிரக வாசிகள் செய்திருக்கல்லம் என கூறினர்.
அனுட்டா, ஈஸ்டர் தீவை விட பன்மடங்கு சிறியது. மொத்த பரப்பளவே ¼ சதுர கிலோ மீட்டர்தான். அச்சிறிய தீவில் 300 அனுட்டர்கள் வாழ்கின்றன. அனுட்டர்கள் புத்திசாலியான மக்கள். சிறிய அளவான தீவில் செழிப்பாக வாழ்கின்றன. முடிந்தவரை நிலத்தை விளைத்து, உனவை உற்பத்திசெய்கின்றனர். அதிகமாக உற்பத்தியாகும் உனவை பதப்படுத்தி, நிலத்தடியில் சேமித்து வைக்கின்றனர். அவ்வாறு சேமிக்கப்பட்ட உணவு புயல் வரும் வேளையில் கைக்கொடுக்கின்றது. தீவைசுற்றியுள்ள கடலில் திறமையாக மீன் பிடிக்கின்றன, ஏன் வலைவைத்து, டென்னிஸ் மட்டை போல் கருவியால் இரவில் பறந்துவ்ரும் பறவைகளை பிடிக்கின்றன.
அனுட்டர்கள் தங்களுக்கு கிடைக்கும் எல்லா பொருட்களையும் தங்கள் சமுகத்துடன் பகிர்ந்து கொள்கின்றன. சமுதாய நோக்குடனே அவர்களின் என்னமும் செயலும் உள்ளது.
சமீப ஆராய்ச்சியில் ஈஸ்டர் தீவு வளம்மிகுந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கே மனிதர்கள் வாழ்ந்தனர், செழிப்பாக வாழ்ந்தனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எங்கே? இன்று நாம் எவ்வாறு சாதி, மதம் என பிரிந்துள்ளோமோ, ஈஸ்டர் வாசிகளும் பிரிந்திருந்தனர். அங்கு உள்ளவர்களிடம் யாரால் பெறிய கடவுள் சிலை அமைக்கமுடியும் என போட்டிபோலும். இதற்கு அங்குள்ள பாரைகளால் பிரம்மாண்ட கடவுள் சிற்பங்கள் செய்து, பனை மரங்களை வெட்டி, அவற்றின் மூலம் மலை உச்சிக்கு சிலைகளை கொண்டு சென்று நிறுத்தினர்.
செழிப்பான தீவில் வசித்தாலும் அவர்களின் போட்டி, ஒன்றுபடாத வழ்வு, மூட நம்பிக்கை போன்றவை அவர்களின் பேராசையை உயர்த்தி, அத்திவையே அழித்தது. இப்போதோ அத்தீவில் பிரம்மாண்ட சிலை மற்றும் புல் தவிர வேறொண்றும் இல்லை.
இவ்வுலகமும் ஒர் தீவுதான். நம் மனித இனம் அனுட்டர்கள் போலவா, அல்லது ஈஸ்டர்கள் போலவா என காலம் விடை சொல்லும்.