அன்று ஒரு நாள் நான் ஓய்வெடுத்து கொண்டிருந்த வேளையில் பக்தி வழியும் கூட்டம் என்னை நாடியது. கையில் ஒரு தாளைத்தந்தனர், கோயிலில் கும்பாபிஷேகமாம், நன்கொடை வேண்டுமாம்! “ஐயா நான் பெரியார் கட்சி, கோவிலுக்கெல்லாம் காசு தருவதில்லைஎன நான் கூற, அக்கூட்டம் ஒரு வகையான பார்வை பார்த்துவிட்டு கிளம்பியது.

எங்கு இருந்தாலும், நம் சுமையினை போடுவதற்கு ஓர் இடம் கோயில். ஊர் எங்கும் கோயில், மசூதி, தேவாலயங்களை காண்கிறேன். மனிதனுக்கு உலகம் என்று வீடு படைத்த கடவுளுக்கு வீடு கட்டி நன்றிகடனை செலுத்துகிறான் மனிதன்.

ஒரு மதிப்புக்குரிய மனிதனை கண்டேன், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். இவரின் குறையை கடவுளிடம் சொன்னால் தீர்ந்துவிடுமே, பைத்தியக்காரண் ஏன் இப்படி அலைகின்றான்? என்று நினைத்த பொழுது, ஒரு மரத்தின் மறைவாக சென்றார். கடவுலாலும் தீர்க்க முடியாத பிரச்சனை போலும்?

தெருவிற்கு தெரு கோவில் கட்டி அதனை பாதுகாக்க, புதுபிக்க பிச்சை எடுக்கும் ஆத்திக கூட்டம், ஏன் தெருவிற்கு ஓர் கழிப்பறை அமைத்து மனிதனின் குறையை நீக்க முன்வரவில்லை? என்று யோசித்தேன். கோயிலை கட்டியவர்கள், நிர்வாகிப்போரை பார்த்தேன், எல்லோரும் மளிகையில் வாழ்க்கை வாழ்கின்றனர். காந்தி அடிகள் கோயிலை கட்டவில்லை, ஆனால் கழிப்பறையை சுத்தப்படுத்தினார். அரையாடையுடன் பிச்சைக்காரணைப் போல வாழ்ந்த அவரை பக்தியில் தோயிந்த மனிதனால் சுட்டு தள்ளப்பட்டார். எல்லாம் கடவுளின் செயல்!

என் நண்பணாகிய தேவனுக்கு கழிப்பறை கண்டால் பிடிக்காதோ?

சாத்தான்