என்ன கொடுமை சார் இது
இன்று நான் கடுப்பில் இருந்தேன். நான் பிரப்போஸ் பன்ன பொன்னு, நான் கமிட் ஆயிட்டேன்னு சொல்லிட்டா. சரி ஒழிஞ்சிது சனியன்னு கம்முனு துக்கத்துல இருந்தா, என் நன்பர்கள் ‘பொன்னுங்க இப்படித்தான் அலைய வெப்பாங்க, நீ எதுக்கும் இன்னொரு முறை டிரை பன்னு’ னு அட்வைஸ் தாங்கல. சரின்னு அவளுக்கு சென்டி- மென்டலா ஒரு ஈமேயில் அனுப்பிட்டு, பூவா தலையா போட்டுக்கொண்டு இருந்த நேரம்.
என் அலுவலகத்துக்குள்ளே ஒரு கேனையன் கம்பியூட்டர் கற்றுக்கொள்ள நுழைந்தான். வந்தோமா சென்றோமா னு இல்லாமல் அவன் கேள்வி கேட்க ஆரம்பித்தான். ‘சார் உங்க வீட்டு பக்கத்துல அமேரிக்கென்ஸ் இருக்காங்களா?’ என கேட்க ‘இல்ல டா, அவங்க அமேரிக்கேன்ஸ் இல்ல, நம்ம ஊரு ஆளுங்கதான், சும்மா அங்க பொயிட்டு வந்திருக்காங்க’ னு சொன்னேன். ‘அத்தான் சார் அங்க போயிட்டு வந்திருக்காங்க இல்ல, அதனால் தான் அவங்க அமெரிக்கென்ஸ்’ என்று சொன்னான். ‘டேய் அவங்க நம்ம ஊரு ஆளுங்கடா’ என்று நான் சொல்ல ‘சார் அவங்க அமெரிக்காவுக்கு தானே போயிட்டு வந்தாங்க?’ என்று அவன் அடித்து கேட்க ‘அம்மாம் அதுக்கு என்ன இப்போ?’ என்று நான் கேட்க ‘அதனால் தான் சார் அவங்க அமெரிக்கேன்ஸ்’ னு சொன்னான் அவன்.
படுபாவி நான் எனக்கு லவ்வர் கிடைப்பாளா னு ஒரு சென்டிமென்டலா திங்க் பன்னும் பொழுது இவன் வேரா ரம்பத்த போடரானேனு கடுப்பு வேர. ‘சரி இன்னிக்கு படிச்சது போதும்’ னு சொல்லி அவன அனுப்பினேன். அமெரிக்காவுக்கு பொயிட்டு வந்தவங்க அமெரிக்கென்ஸ் நா, வனவிலங்கு காட்சியகத்துக்கு போய்ட்டு வரவங்க குரங்கா? கொலக்காரன் பேட்டைக்கு பொயிட்டு வரவங்க கொலைகாரனா? இப்படியே போனா என்ன அர்த்தம். அப்ப பாத்ரூம் பொயிட்டு வந்தவங்கள அவன் என்ன சொல்லுவானோ? என்ன கொடும சார் இது.